Thanks giving day
ராஜா சர் முத்தையா செட்டியாரின் சிறப்புகளை கொண்டாடும் தமிழ் நாள்
ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினம் ‘தமிழ் நாள்’ ஆகக் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. நிர்வாக பிரதிநிதி CCET டாக்டர் புனிதா, பள்ளியின் கல்வித் துறை தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள், அன்று பிறந்தநாள் கொண்டாடிய மாணவர்கள், குத்துவிளக்கேற்றி விழாவைச் சிறப்பித்தனர்.
ஐந்தாம் வகுப்பை சேர்ந்த சுபிக்ஷா, ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களின் சிறப்புகள் குறித்தும், ஏழாம் வகுப்பை சேர்ந்த மிருதுளா தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றினார்கள்.
பின்னர், மாணவர்கள் குழுவாக பாரதியார் பாடல்களைப் பாடினர். விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது. இது மட்டுமல்லாமல், அன்றைய தினம் பள்ளியில் பணியாற்றும் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், மாணவர்கள் கொண்டு வந்த பழங்கள், இனிப்பு பண்டங்கள் அவர்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது.
பள்ளியின் தமிழ்த் துறையும் நிகழ்வுகள் மற்றும் கொண்டாட்டங்களுக்கான குழுவும் இணைந்து இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.